2021 மார்ச் 03, புதன்கிழமை

கருங்கல் வெடிப்பு: 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், வெவகெதரப் மலையிலுள்ள பாரிய கருங்கல் வெடித்ததால் அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை (23) இரவு, பெரிய சத்தம் கேட்டதையடுத்து பிரதேச வாசிகள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தனர்.

அதன் பின்னரே, அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .