2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சமீரகமவுக்கு புதிய பஸ் தரிப்பிடம்

எம்.யூ.எம். சனூன்   / 2017 மே 23 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கொத்தாந்தீவு - சமீரகம பிரதேசத்தில், பயணிகளின் நலன் கருதி, புதிதாக பஸ் தரிப்பிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்கென கையளிக்கப்பட்டுள்ளது.  

புத்தளத்திலிருந்து உடப்பு வரையான பஸ் போக்குவரத்தில், சமீரகம மற்றும் பெருக்குவட்டான் போன்ற பிரதேசங்களுக்கு, பஸ் தரிப்பிடமொன்று இதுவரை இருக்கவில்லை. இதனால், அப்பிரதேச மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.  

இந்நிலையில், சமீரகம பிரதேச பொதுமக்கள், “கட்டார் நாட்டில் வாழும் சமீரகம சகோதரர்களின் அமைப்பிடம்” (செக்) விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், அவ்வமைப்பின் 75,000 ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், மேற்படி பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X