2021 மே 06, வியாழக்கிழமை

பெண் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், ஹலென்பிதுனுவெவ பகுதியிலுள்ள களுஎபே கால்வாயிலிருந்து நேற்று திங்கட்கிழமை (23) காலை 9 மணியளவில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

அதே பகுதியைச் சேர்ந்த டிகிரி பண்டாஹே இந்துவதி எனும் 49 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் வீட்டுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்க்கச் சென்றபோது காணாமல் சென்றுள்ளாரென ஹலென்பிதுனுவெவ பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போதே குறித்த பெண், களுஎபே கால்வாயிலிருந்து நேற்று (23) மாலை சடலமாக மீட்கப்பட்டார். 

அநுராதபுரம் மரண விசாரணை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் மரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .