2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

திருமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 9 ந் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் இந்த உத்தரவை திங்கட்கிழமை (02)  வழங்கினார்.

இவ்விவகாரம் தொடர்பில்  மேல்முறையீட்டு நீதிமன்றில் நாளை(3) மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகள் உற்பட எதிராளிகளுக்கு பிணைக்கான அனுமதி வழங்கப்பட்டால் அதனை அடிப்படையாக கொண்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் பிணைக்கான மனுவை முன் வைக்க தாம் எண்ணியுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி மஹேஸ் கொட்டுவெல்ல நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .