2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மட்டி இறைச்சி அதிகமாக கிடைக்கின்றது

Niroshini   / 2016 மே 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஹிரான் பிரியங்கர 

மட்டி இறைச்சிக்கான கேள்வி நம்மவர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகின்றது. கந்தகுழிய தில்அடவிய ஓடைக் களப்பில் தற்போது மட்டிச் சிப்பிகள் அதிகளவில் காணப்படுகின்றன.


தில்அடவி களப்பில் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் சென்று மட்டி சிப்பிகளைப் பொறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள மீனவக்குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களும் மட்டி சிப்பி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக மட்டிச் சிப்பியில் பெருமளவிலான புரதச் சத்துக்கள் உள்ளதாகவும், குறித்த மட்டியின் கோதினை நீக்குவதற்கு, வெந்நீரினைப் பயன்படுத்தி நீக்கலாம் எனவும் மட்டிச்சிப்பி பொறுக்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காலங்களில், கந்தக்குழி பகுதியில் மட்டியிறைச்சி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைவாகக் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .