2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் மனைவியைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

நவகத்தேகமப் பகுதியில், மதுபோதையில் தனது மனைவியைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, நேற்று புதன்கிழமை (16)  அதிகாலை 4.30 மணியளவில்,  நவகத்தேகம பொலிஸ் நிலையத்துக்கு அலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி மேற்கொண்ட புகாரையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பொலிஸ் அதிகாரியைக் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கைது செய்யப்படும் போது அதிக மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X