2020 நவம்பர் 25, புதன்கிழமை

விபத்தில் இருவர் பலி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

மாராவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுபத்தாவ வீதியின் துக்கண்ணாவ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதியான வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வி.டி. இந்திக கயான் (வயது 34) மற்றும் குதாரிப்பு வெலிபன்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வி.யு. துஷித தர்சன (வயது 32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக, மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

உடுபத்தாவ திசையிலிருந்து மாராவில நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வகனமும் நாத்தாண்டி திசையிலிருந்து உடுபத்தாவ திசையில் பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இவ் இருவரும், மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் விபத்துடன் தொடர்புடைய ரிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரும் காயங்களுக்குள்ளாகி, துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மாராவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .