2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இலங்கை ஊழியர்கள் 14பேருக்கு இந்தியாவில் பயிற்சி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையில் டயர் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிலிருந்து கைத்தொழில் வணிக அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட 14 ஊழியர்கள் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஜே.ஜே.மேர்பிஇ இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் இப்பயிற்சியினை வழங்குகின்றது. ஒரு வாரகாலம் இவர்கள் இப்பயிற்சியினை பெறுவார்கள் என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவது குறித்து இலங்கை தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய முன்வந்துள்ள நிலையிலேயே மேற்படி ஊழியர்னள் இந்தியாவுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கெட்டுக்களை அமைச்சர் வழங்கி வைத்தார். இவர்களுக்கான செலவு தொகையில் 50 சதவீதத்தை கைத்தொழில் அமைச்சு  வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--