2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வடமத்திய மாகாண தொழிற்பயிற்சிகளுக்கு ரூ.200 இலட்சம் நிதி ஒதுக்கீடு: பேர்டி பிரேம்லால்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாண சபையினூடாக செயற்படுத்தப்பட்டு வரும் தொழிற் பயிற்சி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு 200 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்கா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 600 இளைஞர் யுவதிகளுக்கு சாரதிப் பயிற்சியும் 100 இளைஞர் யுவதிகளுக்கு கட்டிடத்துறையில் பயிற்சியும் 200 இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை குறைந்த வருமானம் பெறும் இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில்களுக்கான உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் 830 இளைஞர் யுவதிகள் இவ்வாறு தொழிற் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேம்லாம் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--