Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக முந்தல், கல்பிட்டி, வண்ணாத்தவில்லு ஆகிய பிரதேசங்களில் தண்ணீரின்றி விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த விவசாய நிலங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குமாறு புத்தளம் மாவட்ட செயலாளரிடம், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஏ.யஹ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், கடந்த இரண்டு வருடங்களாக பருவ மழை சீராகப் பெய்யாத காரணத்தினால் இந்த வருடம் புத்தளம் மாவட்டத்தின் விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
விவசாய நிலத்திற்குப் போதுமான தண்ணீரின்றி விவசாய விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனவே, வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .