2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

நீண்ட காலமாக சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச செங்கல்ஓய செங்கவெலிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மணல் அகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வு வேலைகள் செங்கல்ஓய பிரதேசத்தின் காணி ஒன்றில் இடம்பெற்று வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தற்போது மணல் அகழ்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன்,  இத்தடையினை மீறி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

பெக்கோ இயந்திரம் மற்றும் டிரக்டர் வாகனம் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் சீ. ஈ வெத்சிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .