Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
நுரைச்சோலையில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் முதல் கட்ட நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் புத்தளம் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் .
எஹியாவின் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, அனல் மின் நிலையத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த போதிலும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் வடமேல் மாகாணத்தின் சுற்றாடல் மதிப்பீடின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
அனல் மினசார நிலையத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் புத்தளத்திற்கு போதிய மழை இல்லாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வேலைத் திட்டத்தினை செயல் படுத்தும் சீன நாட்டு கம்பனி மின் நிலையத்தின் பணிகளுக்கு மழையினால் வரும் இடஞ்சல்களை தடுக்க மழை மேகங்களை தூரத்திற்கு அவ்விடத்திலிருந்து அனுப்புவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக அனல் மின் நிலையத்தினை அண்மித்த பிரதேசங்களிலும் புத்தளத்திலும் போதிய மழையில்லாத நிலையில் தென்னை தோட்டங்கள் அழிந்து போவதும், விவசாயத்தை முறையாக செய்ய முடியாது போவதும், குடிநீர் இல்லாமல் போவதும் மக்கள் எதிர் நோக்கியுள்ள இன்னல்களாகும்.
சுற்றாடலுக்கு மிக அன்பு காட்டும் நீங்கள், இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பொது மக்கள் எதிர் நோக்கியுள்ள இன்னல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன். இது தொடர்பாக உங்களுடன் நேரடியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றினை தருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
02 Jul 2025