Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
புத்தளத்தில் பெய்த கடும் மழை காரணமாக நகரத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் நகரத்தின் தாழ்ந்த பிரதேசங்கள் மற்றும் தில்லையடி பிரதேசங்கள் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியும் வெள்ள நீரில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்றைய தினம் பாடசாலையில் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.அன்வர் தெரிவித்தார். பாடசாலையில் வெள்ள நீர் மட்டம் சுமார் 3 அடி வரை காணப்படுவதாகத் தெரிவித்த அதிபர்இ இன்றைய தினம் கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ மாணவர்கள் வரவு குறைவாக இருந்ததாகவும்இ இதனால் இன்றைய தினம் வலயக் கல்விப் பணிமனையுடன் தொடர்பு கொண்டதன் பின்னர் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தளம் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும்வகையில் கான்களை வெட்டித் துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் நகர சபை அறிவித்துள்ளது. நகர சபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மி, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று இப்பணிகளைப் பார்வையிட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025