Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இளைஞர் விவகார அமைச்சின் கீழ் புத்தளம் நாகவில்லு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடைபெறுகின்ற பல பயிற்சிகளை மேம்படுத்தல் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளுக்காக இந்திய அரசு 61 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இதில் 44 மில்லியன் ரூபாய்கள் தொழில் பயிற்சிக்கான உபகரணங்கள் கொள்வனவுக்கும் 07 மில்லியன் ரூபாய்கள் 3 பஸ் வண்டிகளுக்காகவும் 10 மில்லியன் ரூபாய்கள் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கும் செலவு செய்யப்படவுள்ளன.
அலுமினியம் பொருத்துகை, மின்சார வேலைகளுக்கான பயிற்சிகள், கணினி, மோட்டார் வாகனம் திருத்துதல், இயந்திர பயிற்சிநெறி, தையல் பயிற்சிநெறி என்பன இப்பாடநெறிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இத்திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, றிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர், ஹுனைஸ் பாரூக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொழில் பயிற்சி நிலைய பயன்பாட்டுக்கான பஸ் வண்டிகளும் இங்கு கையளிக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026