2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பேத்தியை வல்லுறவுக்கு உட்படுத்திய பாட்டன் கைது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

தனது பேத்தியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுமியின் பாட்டன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கெந்தேத்தவ பகுதியில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஒருத்தியே இவ்வாறு பாட்டனின் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளவராவார்.

குறித்த சிறுமியின் தந்தை, அவளின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதன் பின்னர் சிறுமி தனது தாயின் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளாள். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் பாடசாலை சென்று திரும்பி, வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை, பாட்டன் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி பயம் காரணமாக இவ்விடயத்தை வெளியில் யாரிடமும் சொல்லாது இருந்த நிலையில் இச்சம்பவத்தை அறிந்த அயல் வீட்டார் ஒருவர் இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணை செய்யுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆனமடு பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட ஆனமடுவ பொலிஸார் குறித்த சிறுமியை விசாரித்ததில் அச்சிறுமி நடந்த விடயங்களை பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் பாட்டனைக் கைது செய்ததாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • xlntgson Thursday, 07 October 2010 09:39 PM

    கர்ப்பமான கதைகளும் வந்திருக்கின்றன, தந்தை! சகோதரன்!! மாற்றான் உறவில் நடப்பது குறைவு போல் தெரிகிறது. எல்லாம் உள்வீட்டு சங்கதிகளாக தெரிகிறது. எங்கேயோ தவறு இருக்கிறது. காதலுக்கு பஞ்சம்? திருமணமுடிக்க வசதியில்லாமை அல்லது திருமணமுடிக்க பயம் அல்லது திருமணமுடிக்க தகுதி இருந்தும் ஆணவத்தால் தள்ளிப்போட்டு கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போதல். திருமணம், செக்ஸ் அல்லாத மற்றெல்லா விடயங்களுக்கு முக்கியம் கொடுப்பதும் திருமணம் முடிவு ஆவதை பல பேர் தலையிடுவதும் போல நீட்டிக்கொண்டே போகலாம். உறவில்லா திருமணங்களும் அதிகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .