2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக மாதம்பையில் தேங்காய் உடைப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மும்தாஜ்)

இராணுவ நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக மத வழிபாட்டு நிகழ்வொன்று நேற்று மாதம்பையில் இடம்பெற்றது.

மாதம்பை தனிவெல்ல கோவிலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத வழிபாடுகளின் பின்னர் தேங்காய்களும் உடைக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணியின் சிலாபம் தொகுதி அமைப்பாளர் நிமல் பத்திரண தலைமையிலான ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .