2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நாகவில்லுவில் பாலர் பாடசாலை திறப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம், எருக்கலம்பிட்டி, நாகவில்லு மீள்குடியேற்றக் கிராமத்தில் எருக்கலம்பிட்டி பீ பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையினரின் வேண்டுகோளுக்கிணங்க வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும் வர்த்தகருமான இஸ்ஹாக் முஹம்மத் அரபாத் அவர்களின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த பாலர் பாடசாலையினைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .