2025 ஜூலை 10, வியாழக்கிழமை

செயன்முறைப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவனின் கால் பாதத்தில் இரும்புக் கம்பி குத்தியது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

பாடசாலையில் விவசாயப் பாடத்தில் செயன்முறைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 வயதுடைய மாணவனின் கால் பாதத்தில் குத்திய இரும்புக் கம்பி நேற்று சிலாபம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட  சத்திரசிகிச்சையின் பின் அகற்றி எடுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் கொகாவில அரச பாடசாலையில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் ஏ.பி.லக்சித எனும் மாணவனின் கால் பாதத்திலேயே இரும்புக் கம்பி குத்தியது.

பாடசாலையில் விவசாயப் பாட நேரத்தின்போது செய்முறைப் பயிற்சிக்கான நேரத்தில் பாத்தி செய்து அதற்கு பசலை நிரப்புவதற்காக இரும்பு முட்கம்பியால் பசலையினை குத்தியபோது முட்கம்பி அருகிலிருந்த தென்னம் பராலையில் பட்டு எதிர்பாராதவிதமாக மாணவனின் இடது காலி;ல் குத்தியது. காலின் மேலக்ல் குத்திய கம்பி கால் பாதத்தை துளைத்து வெளியே வந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த மாணவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு மாணவனுக்கு  சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குத்தப்பட்ட முட்கம்பி வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .