2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தந்திரிமலை பிரதேசத்தில் பல வீதிகள் வெள்ளத்தில்; போக்குவரத்துக்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

நாச்சியாதீவு குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மல்வத்து ஓயாவூடாக பெருக்கெடுக்கும் நீரினால் தந்திரிமலை பிரதேசத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.இதனால், அவ்வீதிகளூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

தந்திரிமலை போகொட பாலத்தின் ஊடாக ஐந்து அடிக்கு மேல் நீர் பாய்வதனால், உபதிஸ்ஸகம கொக்கபே ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  தந்திரிமலை செட்டிகுளம் நீரில் மூழ்கியுள்ளதால் கஜசிங்கபுர உட்பட வடக்கிற்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .