2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

புத்தளத்தில் வசித்த யாழ். முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு குடாநாடு பயணம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில்  புத்தளத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர், மீள் குடியேற்றத்திற்காக தங்களது சொந்த இடங்களை நோக்கி இன்று காலை புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.

வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம் என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.

இதன் முதற்கட்டமாக 150 குடும்பங்களின் தலைவர்கள் மீள்குடியேற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினர் சில தினங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதற்கட்டப் பயணக் குழுவில் குழுவில் யாழ். மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஜீ.பஷீரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--