2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தேவாலஹந்தி பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலஹந்தி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் படி கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது பிளாஸ்டிக் போத்தலிருந்து    மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டதாக  பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் தேவாலஹந்தி எனும் மீனவக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைவதற்கான  படிக்கட்டை  நிர்மாணிப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலத்தைத் தோண்டியபோது,  நிலத்திற்கு அடியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலொன்று வெளிவந்துள்ளது. வீட்டு உரிமையாளர் அந்த பிளாஸ்டிக் போத்தலை எடுத்து பார்த்தபோது, அதில் கைக்குண்டுகள் இருப்பதை கண்டுகொண்டு உடனடியாக பள்ளம பொலிஸாருக்கு அறிவித்தார்.


அந்த பிளாஸ்டிக் போத்தலினுள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் இருந்ததை உறுதி செய்த பொலிஸார்,  புத்தளம் இராணுவ முகாம் அதிகாரிகளை வரவழைத்து அக்கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
இது தொடர்பில் பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .