2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சுயேட்சை குழு வேட்பாளர்கள் ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

நடைபெறவுள்ள உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு அன்னாசி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு -2 இன் முதன்மை வேட்பாளர் ஏ.கே.எம். சக்கீர் தலமையிலான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான எம்.எஸ். சேகு அலாவுதீனுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.

'கற்பிட்டி பிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பிரிந்து செயற்படுவதனால் கற்பிட்டி பிரதேச முஸலிம்கள் பாரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும், இவ்வாறு பிரிந்து செயற்படுவதனால் எதனையும் சாதிக்க முடியாது. இதற்கு முன்னர் பிரதேச சபைத் தலைவராக இருந்த எம்.எஸ். சேகு அலாவுதீனை மீண்டும் தலைவராகக்கினால் எமது பகுதி இன்னும் பல அபிவிருத்தியைப் பெறும் என்பதனால் தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம்' என சக்கீர் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--