2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றோரின் விபரங்கள் அறிவிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அரச அதிகாரிகளின் விபரத்தை புத்தளம் தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 8657 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 7103 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 1554 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன..

புத்தளம் நகர சபைக்கு தபால் மூலம் வாக்களிக்க 288 பேர் ,  புத்தளம் பிரதேச சபைக்கு 251 பேர்,  கல்பிட்டி பிரதேச சபைக்கு 281 பேர்,  வண்ணாத்தவில்லு பிரதேசசபைக்கு 296 பேர்,  கருவலகஸ்வௌ பிரதேச சபைக்கு 857 பேர்,  ஆனமடுவ பிரதேச சபைக்கு 1655 பேர்,  ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்கு 561 பேர்,  நாத்தாண்டிய பிரதேச சபைக்கு 897 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் இரண்டு நகர சபைகளுக்கும்,  10 பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் சில மனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை உள்வாங்குமாறு கோறி நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகர சபை,  வென்னப்பபுவ, நவகத்தேகம,  சிலாபம் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படடுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .