2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

பாலாவி முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.மும்தாஜ், றஸீன் றஸமின்)

மதுரங்குளி கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சீ. நஜீமுதீனை சேவையிலிருந்து இடைநிறுத்தியதை கண்டித்தும் இப்பாடசாலைக்குப் புதிய அதிபராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை எதிர்த்தும் பாலாவி முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (25) காலை பாடசாலையின் முன்னால் பாடசாலை வாசல்களை மூடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாடசாலைக்குள் செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 'உண்மைக்கும் நேர்மைக்கும் உயர் அதிகாரிகளே உலைவையாதே'.' அநியாயமாக பறிக்கப்பட்ட அதிபரின் பதவியை திருப்பிக் கொடு'.' 'எமது ஊர் மாணவர்களை வழி நடத்த நாம் விரும்பும் அதிபருக்கு இடம் வழங்கு'' போன்ற பல சுலோகங்களை ஏந்திய வண்ணம் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
 
இதன் போது பாடசாலை ஆசிரியர்களை உள்ளே சமூகமளிக்க விடாது பாடசாலை பிரதான கதவு அடைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு வருகை தந்த கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஆர்.நிமல்சிறியுடன் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--