Suganthini Ratnam / 2011 மார்ச் 01 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சேதத்திற்குள்ளான வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இப்பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிலையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பகல் 1 மணிக்கு புத்தளம் நெலும்வெவ பிரதேசத்தின் மொறவெவ குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாதைகளும் புனரமைக்கப்படவுள்ளன. இவ்வாறு வெள்ளத்தக்ல் சேதமடைந்த வீதிகள் தொடர்பான விபரங்கள் ஏற்ன்கனவே ஒவ்வொரு பிரதேச கிராம அதிகாரிகள் மூலமும் பெறப்பட்டுள்ளன.
இப்புனரமைப்பு பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கமநல அபிவிருத்தி மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்கிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026