Kogilavani / 2011 மார்ச் 30 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரஸீன் ரஸ்மின்)
கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளைக் பெற்ற எம்.எச்.எம். மின்ஹாஜூக்கு இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான நுரைச்சோலைப் பகுதியில் வரவேற்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம். மின்ஹாஜ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், மாம்புரியில் இருந்து மின்ஹாஜின் ஆதரவாளர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். நுரைச்சோலை வர்த்தக கட்டிடத்திற்கு முன்னாலும் ஆதரவாளர்கள் திரண்டு நின்று அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago