Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பொசன் உற்சவ காலத்தின் போது அநுராதபுரம் அட்டமஸ்தான மற்றும் மிஹிந்தலை பகுதிகளுக்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட புகையிரத சேவையினை நடாத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இம்மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கும் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கும் 22 சேவைகளும், அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும் மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்திற்குமாக 52 சேவைகளும் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆறு மேலதிக சேவைகளை கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 15ஆம் திகதி மூன்று மேலதிக சேவைகளும் 16ஆம் திகதி இரண்டு மேலதிக சேவைகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொசன் போயா தினத்தன்று அநுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை ஐந்து விசேட புகையிரத சேவைகளும் 16ஆம் திகதி 4 விசேட சேவைகளையும் நடத்;தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை அநுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து மிஹிந்தலைக்கு இடையில் காலை 9.45 முதல் 24 மணி நேர புகையிரத சேவையொன்றும் நடத்தப்படவுள்ளது. இவற்றில் 52 விசேட சேவைகளும் உள்ளடங்குகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .