2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் கட்டிட நிர்மானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 09 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

கல்பிட்டி கோட்டக்கல்வி பிரிவுக்குட்பட்ட திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 3 மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வடமேல் மாகாண சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஜே.ஜி.என். திலகரத்ன, விசேட அதிதிகளாக வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் ஆகியோரும், மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின்  முயற்சியினால் இப்பாடசாலைக்கு இந்நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .