2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

Kogilavani   / 2011 ஜூன் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

மதுரங்குளி நகரில் கடையொன்றினை உடைத்து 12 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை  முந்தல் பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளதுடன் 12 கையடக்க தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் கொள்ளையடித்த கையடக்க தொலைப்பேசிகளினை முந்தல் பிரதேச கடையொன்றில் விற்பதற்கு முயற்சித்தபோது, பொலிசாருக்கு கிடைத்த தகவலினையடுத்து இந்நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜிவ அலவத்தவின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X