2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 18 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ.சீ.பண்டார, பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .