Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
மாரவிலப் பிரதேதசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரு வௌ;வேறு வாகன விபத்துக்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாரவிலப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸூடன் மோட்டார் சைக்கிலொன்று நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார். சைக்கிலை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மாறாவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மாறாவிலப் பிரதேசத்திலுள்ள வீட்டின் மதில் ஒன்றில் மோதியதில் மற்றுமொறு விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் மதில் சேதமடைந்துள்ளதுடன், லொறியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவங்கள் தொடர்பாக மாரவிலப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
38 minute ago