2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தொட்டில் கயிறு இறுகி மாணவி பலி

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் இக்கிரிகொள்ளாவ கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.20 மணியளவில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தொட்டில் கயிற்றில் கழுத்து சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி தனியாகத் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த போது தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி மயக்கமடைந்துள்ளதுடன் சிகிச்சைக்காக றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுமியின் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இக்கிரிகொள்ளாவ மு.ம.வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இம்மாணவியின் அகால மரணத்தினால் இக்கிரிகொள்ளாவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
 


  Comments - 0

  • neethan Tuesday, 27 September 2011 07:20 PM

    தொட்டில் கயிறு மீகாமன் கயிறாகிவிட்டது? ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .