2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வடிகான் அமைக்கும் பணிகள் துரிதம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் கடையாக்குளம், நூர் நகர் பகுதியில வடிகான் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் 3,060,000  ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 710 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாக இவ் வடிகான் அமைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் புத்தளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக கடையாக்குளம், நூர் நகர் பகுதியினை சேர்ந்த சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டதுடன் சுமார் நான்கு மாதங்கள் வரை இவ் வீதிகளினால் வெள்ளநீர் ஒடிக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக பெரும் மழை ஆரம்பிக்க முன்னரே  இவ் வடிகாண் அமைப்பு பணிகள் முடிப்பதற்காக விரைவாக கட்டுமான பணிகள் நடைப்பெறுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X