Suganthini Ratnam / 2011 நவம்பர் 17 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேக நபர்களில் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதிபதி, மற்றைய சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
இவர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்.
பதினொரு வயதுச் சிறுமியொருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் வண்ணாத்திவில்லு பொலிஸாரால் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026