2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக சென்ற சிறுவனுக்கு விசர்நாய் தடுப்பூசி மருந்து

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 22 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
   
காய்ச்சலுக்கு இரத்தம் எடுக்கச்சென்ற சிறுவனொருவனுக்கு  வைத்தியரால் வழங்கப்பட்ட மருந்து சிட்டையை சரியாக பார்க்காத தாதியொருவர் விசர்நாய்க்கடிக்கு ஏற்றும் தடுப்பூசி மருந்தை ஏற்றிய சம்பவம் அநூராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்றது.

தனது பிள்ளைக்கு  ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மருந்து எடுக்கச்சென்ற தாய்  வைத்தியரிடம் அச்சிறுவனைக் காட்டி  பரிசோதித்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலையின் இரத்த பரிசோதனை அறையில் கடமையிலிருந்த தாதி வைத்தியர் வழங்கிய மருந்துச் சிட்டையை பார்க்காது விசர்நாய்க்கடிக்கு ஏற்றும் தடுப்பூசி மருந்தை ஏற்றியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .