2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ரஜரட்டை பல்கலை உபவேந்தர் மாணவர்களால் தடுத்து வைப்பு

Super User   / 2011 நவம்பர் 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம், சாலியபுரவில் அமைந்துள்ள ரஜரட்டை பல்கலைக்கழக வைத்திய பீடத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அதிகாரிகளை மாணவர்கள 11 மணி முதல் 2 மணி வரை தடுத்து வைத்ததாக பல்கலைக்கழக ஆவணக்காப்பாளர் ஏ.ஜீ.கருணாரத்ன தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த வேளையில் கறுப்புக் கொடிகள் கட்டி எதிர்ப்பை வெளிக்காட்டிய வைத்திய பீட மாணவர்கள், நிகழ்வு முடிவடைந்து வெளியாக முற்பட்ட போது  பிரதான வாயில் கதவை மூடிய தடுத்து வைத்துள்ளனர்.

தமது பீடத்தில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ பயிற்சிக்கூட கட்டிடத்தின் நிர்மாண பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தினால் தமது பயிற்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதன் நிர்மாணப் பணிகளை துரிதமாக முடித்து, திறந்து வைப்பதில் உபவேந்தர் உட்பட்ட அதிகாரிகள் அசிரத்தை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட குழுவினர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிர்மாண பணிகள் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்து திறந்து வைப்பதாக உறுதியளித்ததை அடுத்து தடுத்து வைக்கப்படடிருந்த ரஜரட்டை பல்கலைக்கழக உபவேந்தர் கே.எச். நந்தசேன, ஆவணக்காப்பாளர் ஏ.ஜீ.கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகளை வைத்திய பீட மாணவர்கள் விடுவித்துள்ளனர்.


  Comments - 0

 • meenavan Monday, 28 November 2011 11:07 PM

  கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும், வைத்திய பீட மாணவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இனி என்ன வைத்தியர்களாக வெளியாகியதும், நோயாளர்களை கலகம் செய்து சிகிச்சை பெரும் நிலைக்கு ஆளாக்காமல் விட்டால் அதுவே போதும்.

  Reply : 0       0

  mtmsiyath Tuesday, 29 November 2011 03:00 AM

  கலகம் செய்தாவது படிக்க வேண்டுமென்று ஆர்வமுள்ள வைத்திய பீட மாணவர்களுக்கு எங்களின் ஆதரவுகள் நிச்சயம்.........
  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .