2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் அறுவருக்கு வகுப்புத்தடை

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆறுபேர் வகுப்புத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கே.எச்.நந்தசேன அறிவித்துள்ளார்.

 

கடந்த திங்களன்று உபவேந்தர் உடபட்ட அதிகாரிகளை சாலியபுரவில் அமைந்துள்ள மருத்துவ பீட வளாகத்தில் 3 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாகவே சம்பவத்திற்கு முன்னின்ற மருத்துவ பீடத்தின் இறுதிவருட மாணவர்கள் ஆறு பேர் ஐந்து வாரங்களுக்கு வகுப்புத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வகுப்புத்தடையானது 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .