2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

புத்தளம் நகரசபை தலைவர் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகர மேயரின் அழைப்பினை ஏற்று புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையிலான அரசியல் அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பயணமாகியுள்ளது.

இக்குழுவில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், புத்தளம் நகர சபையின் உபதலைவர் புஸ்ப குமார, நகர சபை உறுப்பினர் ஏ.ஓ.அலிக்கான் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவ்விஜயத்தின் போது இரு நகரகங்களுக்கிடையிலான பொருளாதார, கல்வி, கலை மற்றும் கலாசார, வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கராச்சியிலிருந்து வருகை தந்த தூதுக்குழுவினர் புத்தளம் நகரசபை தலைவரிடம் கராச்சக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்மை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .