2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ், ஹிரான் பிரியங்கர)


புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸின் தலைமையில் புத்தளம் நகரிலிருந்து டெங்குவினை முற்றாக ஒழிக்கும் திட்டத்தின் கீழ் இன்று புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

இதன்போது வீடுகள், வியாபார தலங்கள் என்பன பரீட்சிக்கப்பட்டதுடன் டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலினை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கப்பட்டனர்.

இன்றை நிகழ்வின் போது ஏற்கனவே திட்டமிட்டு வணக்கஸ்தலங்களை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட்ட 85 குழுக்கள், முப்படையினர், சுகாதார பரிசோதகர்கள், இளைஞர் குழுக்கள் என்பன டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டன.

நகர சபையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இத்துடன் முடிவடைய போவதில்லை எனவும் எதிர்வரும் காலங்களில் அமைக்கப்பட்டுள்ள 85 குழுக்களும் மாதாந்தம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் அவர்களின் பகுதிகளில் ஈடுப்படுவர் என்று புத்தளம் நகர சபைத்தலைவர் தெரிவித்தார்.

இதன் போது புத்தளம் நகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .