2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

'தேசத்திற்கு மகுடம் 2012' அநுராதபுரத்தில்

Kogilavani   / 2011 ஜூன் 22 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

'தேசத்திற்கு மகுடம் 2012' எனும் அபிவிருத்திக் கண்காட்சியை அநுராதபுரம் ஒயமடுவ நகரில் நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இக்கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினருடனான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திர தினக்  கொண்டாட்டத்தையொட்டி மேற்படி கண்காட்சி  நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 1,200 அரசாங்க, தனியார் மற்றும் சர்வதேச  நிறுவனங்களின்  உற்பத்திகளும் சேவைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கடந்த கால அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை விளக்குவதாக இக்காட்சி அமையும்.

இக் கண்காட்சிக்காக ஒயாமடுவ பகுதியிலுள்ள நூலகங்கள், பாடசாலைகள், வீதிகள் என்பன புனரமைக்கப்படவுள்ளன.

இவ்வருடம் பதுளையில் நடத்தப்பட்ட தேசத்திற்கு மகுடம் கண்காட்சியியை சுமார்  இரண்டு மில்லியன் மக்கள் பார்வையிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .