2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வாகன விபத்தில் மாகாணசபை உறுப்பினரின் மனைவி உட்பட மூவர் காயம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் வடமேல் மாகாணசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கிங்ஸ்லிலாலின் மனைவி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி வருகை தந்த குறித்த ஜீப் வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையினால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  விபத்து சம்பவத்தில் வடமேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கிங்ஸ்லிலாலின் மனைவி மற்றும் பிள்ளை உட்பட சாரதியும் காயமடைந்துள்ளதுடன் ஜீப் வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .