2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கல்நேவ வைத்தியசாலையை புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

கல்நேவ வைத்தியசாலையில்; பழுதடைந்து காணப்படும் வாட்களை   புனரமைக்கவும்  வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் பிரிவு ஆகியவற்றை சகல வசதியும் கொண்டதாக புனரமைக்கவும் வடமத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்நேவ வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள சிறுவர் வாட்டின் கூரைகளை துரிதகதியில் புனரமைப்பு செய்யவும் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் காணப்படும் சகல குறைபாடுகளையும் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .