2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவை

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் - 2014 கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும் மக்கள் தெளிவூட்டல் நிகழ்வும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெருக்குவட்டான் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பிரதேச மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் இதன்போது வழங்கப்பட்டது.

கற்;பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சேகு அலாவுதீன், முந்தல் பிரதேச செயலாளர் வண்ணிநாயக்க, முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--