2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு கடற்படை அதிகாரிகள் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை உயர் அதிகாரிகள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

பூநகரியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த கடற்படையினரின் காரும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  லொறியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொமாண்டர் ஜானக்க பிரியந்த, லெப்டினட் கொமாண்டர் சரித் கலுதந்திரி ஆகிய கடற்படை உயர் அதிகாரிகளே இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் ஆவர்.

சடலங்கள்  புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X