2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

லொறியின் டயர்களை மாற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

லொறி ஒன்றின் புதிய டயர்களை கழற்றிவிட்டு அந்த லொறிக்கு பழைய டயர்களை பொருத்தியதாகக் கூறப்படும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும்; இந்த லொறியின் டயர்கள் கழற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டபோது அதனைக் கொள்வனவு செய்த ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

தேங்காய் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் தேங்காய்களை ஏற்றிச்சென்ற இந்த லொறியை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். பின்னர் இந்த லொறியை புத்தளம் நீதிமன்றத்திற்கு சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு லொறியை  கொண்டு செல்லும் வழியில் தனது வீட்டுக்கும் லொறியை  கொண்டு சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபர் அந்த லொறியில் இருந்த 5 டயர்களையும் கழற்றிவிட்டு பழைய டயர்களைப் பொருத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இந்த லொறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டபோது, இந்த லொறியின் புதிய டயர்களுக்குப் பதிலாக பழைய டயர்களை பொருத்தப்பட்டிருந்ததை லொறியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் லொறியின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து லொறியின் டயர்களை கழற்றிவிட்டு பழைய டயர்களைப் பொருத்தியதாகக்; கூறப்படும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரையும்  டயர்களை விலைக்கு வாங்கியவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இரு சந்தேக நபர்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X