2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பெண்கள் இருவரை தாக்கியவரை கைதுசெய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பெண்கள் இருவர் மீது தாக்கி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மற்றுமொரு பெண்ணைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண்கள் இருவர் மீதும் கத்;தியால் குத்தியும் அடித்தும் காயம் ஏற்படுத்தியுள்ளார்  சந்தேக நபர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரம்பியடி, சின்னநாகவில்லு பிரதேசத்திலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சந்தேக நபரான பெண், பெண் ஒருவரை தாக்கியுள்ளார். இதன்போது தாக்குதலுக்குள்ளான பெண் சத்தமிட்டுக் கத்துவதைக் கேட்ட மற்றைய பெண் அங்கு வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டபோது அந்தப் பெண்ணையும் சந்தேக நபர் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் இருவருக்கு இடையில் இருந்துவந்த பிரச்சினை  காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--