2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலைய முற்றுகைக்குச் சென்ற பொலிஸாரை தாக்க முற்பட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி  நிலையம் ஒன்றை  முற்றுகையிடச் சென்ற பொலிஸாரை பொல்லினால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டு, செங்கல்ஓயா பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 2  பரல்கள் கொண்ட கோடாவையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஆராச்சிக்கட்டு, செங்கல்ஓயா பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து  சிலாபம் பொலிஸார் அங்கு  சென்று சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த ஒருவர் பொல்லினால்  பொலிஸாரைத் தாக்க முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;. 

கைப்பற்றப்பட்ட 2 பரல்கள் கொண்ட  கோடாக்களுடன் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--