2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கடலில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

கற்பிட்டி, இலந்தையடிப் பிரதேசத்திலுள்ள கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து நேற்று புதன்கிழமை மாலை கடலில் குளித்துக் கொண்டிருந்தபோதே, குறித்த நபர் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளர். ஆலங்குடா ஏத்தாளை கடற்கரை பிரதேசத்தில் குறித்த நபரின் சடலம் இன்று கரையொதுங்கியதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--