2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து; பெண் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பெண் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அப்பெண் உயிரிழந்துள்ளார் என்று மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

 நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாரவில - நாத்தாண்டி வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நாத்தாண்டி வீரஹேன எனும் பிரதேசத்தினைச் சேர்ந்த மாலா நந்தனி ரத்னகாந்தி (வயது 52) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய லொறி மாரவில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--