2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

புத்தளத்திலுள்ள பிரபல பாடசாலை அதிபர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் பிரதேசத்திலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றின் அதிபரை இன்று வெள்ளிக்கிழமை (06) பகல் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

பாடசாலையில் ஒதுக்கப்பட்ட பழைய மேசைகள் மற்றும் கதிரைகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனியார் பழைய இரும்பு விற்பனையாளருக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று குறித்த பாடசாலை அதிபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--